கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2015

கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைப்பு

நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்காக அச்சிடப்பட்ட, கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


கடந்த, 2011ம் ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வியில் 6, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால், அக்கல்வியாண்டே காரணங்கள் ஏதுமின்றி, புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு, கணினி அறிவியல் பாடம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர்.இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் குமரேசன் கூறுகையில், ''சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் புரிந்து, கணினி அறிவியல் பாடம், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.''லட்சக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முறையே, வகுப்புகளும் நடந்தது. ''ஆனால், இரண்டு மாதங்களிலேயே எவ்வித அறிவிப்பும்இல்லாமல், கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதை நிறுத்தி, புத்தகங்களை திரும்ப பெற்றனர். இந்த புத்தகங்களின் நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி