பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.


மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ள பாதிப்பிலிருந்து நீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அரசு கைவிரிப்பு: சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணிமற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 'வெள்ள சேதம் பற்றிகவலைப்படாமல் இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி