தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
பாதுகாப்பு கருதி, ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின.இந்த வெள்ளத்திற்கு, பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களும் தப்பவில்லை. அங்கிருந்த அரிசி, துவரம் பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களும், நனைந்து சேதமாகின.இதுகுறித்து, சத்துணவு, அங்கன்வாடி மைய சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில்,'வெள்ளத்தால், பெரும்பாலான சத்துணவு மையங்கள் மூழ்கின; உணவு பொருட்கள், நீரில் அடித்து செல்லப்பட்டன. பள்ளிகள் திறந்தாலும், சத்துணவு வழங்க முடியாது. இதுகுறித்து, கலெக்டர்கள், சத்துணவு துறை அதிகாரிகளுக்கும் தகவல்தெரிவித்துள்ளோம்' என்றனர்.
Dec 7, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி