தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒருமாதமாக மூடிக்கிடக்கும் பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2015

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒருமாதமாக மூடிக்கிடக்கும் பள்ளிகள்

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளிக்கூடங்கள்ஒரு மாதமாக மூடியே கிடக்கின்றன.கடந்த மாதம் 8–ந்தேதியில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிக்கூடங்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால், மழையின் அளவு மற்றும் அது பெய்யும் நிலையை பொறுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.இந்த விடுமுறை 25–ந்தேதி வரை நீடித்தது. இதன் பின்னர் மழை கொஞ்சம் விடுமுறை எடுத்துக் கொண்டதால் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்த மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும்பள்ளிகள் திறக்கப்பட்டன. 28–ந்தேதி சனிக்கிழமை என்ற போதிலும் அன்று அனைத்துபள்ளிகளுமே முழு நேரமும் செயல்பட்டன.இந்த 3 நாட்களும் பள்ளிகளின் நேரமும் அதிகரிக்கப்பட்டிருந்தது. மாலை 3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் 4.30 மணிவரையிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் செயல்பட்டன.மழையும் நன்கு ஓய்ந்திருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். மறுநாள் திங்கட்கிழமை (30–ந்தேதி)யில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.இந்த மாதம் (டிசம்பர்) 1–ந்தேதி அன்று யாரும் எதிர்பாராத வகையில்பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.இதையடுத்து இன்று (டிசம்பர் 6–ந்தேதி) வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்குள் மழை வெள்ளம் வடிந்து விடும். நாளை (7–ந்தேதி) முதல் பள்ளிகளை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றே கல்விதுறை அதிகாரிகள் நினைத்திருந்தனர்.ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையில், பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாகவே செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர், வேலூர், திருவண்ணமாலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்றுகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த ஒரு மாதமாகவே மூடிக்கிடக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் படுவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி