கடலுக்கு அடியில் உள்ள மசகெண்ணையை எடுத்து , எரித்து உலகில் உள்ள ஆக்சிஜனைஅழித்து காபன்டை ஆக்சைட்டி வெளியே விட்டு. இந்த உலகத்தை நாமே அழித்துவிட்டோம்.ஒரு நாளைக்கு உலகில் ஓடும் கார்கள் எத்தனை கோடி தெரியுமா ? அவை வெளிவிடும்புகை என்ன அளவு தெரியுமா ? ஒரு நாளைக்கு ஆலைகள் வெளியே விடும் புகையின் அளவுதெரியுமா ? நாமே இந்தப் பூமியை நாசம் செய்தோம். இதனை இனி சரிசெய்ய முடியாது.உலகின் வெப்ப நிலை இனி 4 டிகிரி செல்சியசால் அதிகரித்துள்ளது. ஐ.நா 2 டிகிரிசெல்சியசால் அதிர்கரிக்கும் என்று எதிர்வு கூறியது. பூமி வெப்பமாதலை இனியாவதுதடுக்கா விட்டால் இந்த 15 பேராபத்தில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது. ஏழைநாடுகள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகும். இனி வருடம் தோறும் நவம்பர் மற்றும்டிசம்பர் மாதங்களில் சென்னை இப்படி தான் வெள்ளத்தில் தத்தளிக்கப்போகிறது.இதற்கு நாம் தயாராக இருப்பதே நல்லது.
1. இந்த நூற்றாண்டு முடிவில் பூமியின்வெப்ப அளவு 4 டிகிரி செல்சியஸ அதிகரிக்கும். இதுகுறித்த இமாலய அளவுக்குவிஞ்ஞான ஆய்வுத் தரவுகள் உள்ளன. அவை 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு அதிகரிப்புபேரழிவில் கொண்டு விடும் என்று எச்சரித்துள்ளன. 2. எது எப்படி போனால் என்ன?நாம் நம் உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளை கவனிப்போம் என்ற அலட்சிய நோக்கு,மீண்டும்நிலைநிறுத்த முடியாத அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் என்றுநாடுகளுக்கிடையேயான ஐ.நா. பருவநிலை மாற்றக் குழு எச்சரித்துள்ளது. 3. 2100-ம்ஆண்டில் உலக அளவில் கடல்நீர் மட்டம் 26௮2 செ.மீ. வரை அதிகரிக்கும் அபாயம்உள்ளது. அளவு அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக ஐ.நா. தரவுகளே கூறுகின்றன. 4.கிரீன்லாந்து, அண்டார்டிகா பனிப்படலங்கள், இமாலயம் உள்ளிட்ட மலைகளின்பனிச்சிகரங்கள் ஆகியவைகாலியாகிவிடும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதோடு வெப்பமடைவதும் நிகழும்.5. ஐ.நா. நிர்ணயித்த வெப்ப நிலை அதிகரிப்பான மட்டுப்படுத்தப்பட்ட 2 டிகிரிசெல்சியஸ் கூட 28 கோடி மக்களின் அழிவுக்குக் காரணமாகிவிடும். 6. அதிவேகபுயல்கள், உறைய வைக்கும் குளிர், தீவிர வெப்ப அலைகள் ஆகியவை வாடிக்கையானநிலைமைகள் ஆகிவிடும். 7. கடும் வெள்ளங்கள், பனிப்புயல், டைஃபூன் சூறைக்காற்றுஆகியஇயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டி வரும். 8. மேலும் உலகின் ஒரு பகுதியில்தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். 9. சிரியா மற்றும் கலிபோர்னியாவறட்சி நிலைக்கு வானிலை மாற்றமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர்.10. பருவநிலை மாற்றம் விளைவிக்கும் பெரிய வெள்ளங்களினால் பெரும்பகுதி மக்கள்திரள் தங்கள் இருப்பிடங்களை விட்டு புலம் பெயர வேண்டும். 11. விவசாயம் பெரியஅளவில் பாதிக்கப்பட்டு, உணவுப்பொருள் தட்டுப்பாடுகள் ஏற்படும். 12.நீராதாரத்திற்காக போர் மூளும் அபாயமும் உள்ளது. 13. கடல் நீர்மட்ட உயர்வினால்சுந்தரவனக் காடுகள் அழியும் ஆபத்து உள்ளது, இப்பகுதியிலிருந்து இதுவரை இல்லாதஅளவுக்கு வரலாறு காணாத மக்கள் தொகை புலம் பெயரும் நிலை ஏற்படும். 14.மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கடல் நீர்மட்ட உயர்வால் வானிலை மாற்றஅகதி நாடுகளாகமாறும் நிலை ஏற்படும். 15. இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும்விளைவுகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியாமல் ஏழை நாடுகள்பொருளாதார தேக்க நிலைக்குத் தள்ளப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி