வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வரை பெறப்பட்டன.


பெறப்பட்ட படிவங்கள் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பு காரணமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான படிவங்களை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி