வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு முதல் மாத சம்பளம்: பீகார் துணை-முதல்வர் தேஜஸ்வி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு முதல் மாத சம்பளம்: பீகார் துணை-முதல்வர் தேஜஸ்வி அறிவிப்பு

தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களின் நிவாரண நிதிக்காக வழங்குகிறார் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார்.


பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார்.அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 மந்திரிகளும் பதவியேற்றனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவருமான தேஜஸ்வி பிரசாத் (வயது 26) துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். துணை முதல்வரான தேஜஸ்விக்கு, சாலை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட மூன்று இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார். ’மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்குவதாக’ அவர் கூறியுள்ளார்.பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். ’தமிழக மக்களின் துயரை தீர்க்க பீகார் உறுதுணையாக நிற்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும்’ நிதிஷ்குமார்கூறியுள்ளார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தர்ம பிரபு.....

      அப்படியே மாட்டு தீவன ஊழல் ல அடிச்ச பணத்தையும் குடுத்தா நல்லா இருக்கும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி