வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு சிறப்புக் கடனுதவி : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு சிறப்புக் கடனுதவி : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

வெள்ளம் பாதித்த தமிழக பகுதிகளில் சிறப்புக் கடனுதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.SBI Life மற்றும் SBI General Insurance ஆகிய தனது காப்பீட்டுப் பிரிவுகளில் எடுக்கப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கேட்பவர்களுக்கு விரைந்து பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வீடுகள், வாகனங்கள், தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கருதி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீடு, வாகனம்மற்றும் தனிநபர் கடன்களை தாமதமாக செலுத்தினால் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.வீடு, வாகனப் பழுதுகளுக்காக தங்க அடமானக் கடன், சம்பள முன்பணக் கடன் ஆகிய சிறப்புக் கடன்கள் விரைவாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்பிஐ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதுபோன்ற வங்கிச் சேவைகள் தவிர்த்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கியின் சார்பில் உணவு, குடிநீர், போர்வைகள், மருந்துகள் வழங்கும் நிவாரணப் பணிகளிலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி