இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாந்தி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இழந்து, பல நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்திருக்கிறார்களே?
இந்த ஆண்டு மாணவர்கள் தேர்வுக்கே தயாராகாத நிலையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரண உதவித் தொகை பெரியவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகள் முக்கியமானது. மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவச் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும்
Naan padikkum podhu Enga Iyya poninga?????!!!!
ReplyDeleteவரவேற்க வேண்டிய கோரிக்கை .....இயற்கை சீற்றம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் அவர்களை தேர்ச்சி பெறச்செய்வதால் எந்த இழப்பும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை....எனவே கருணாநிதி சொல்கிறார் என ஒதுக்காமல் அரசு ஆவண செய்ய வேண்டும்
ReplyDelete