TNPSC: வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

TNPSC: வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

டிஎன்பிஎஸ்சி நடத்தும் வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.


இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்குஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிடவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

1 comment:

  1. Search IFSC Codes of all banks in India! - http://bankcodeifsc.com/

    Here you can search more than 1,30,000 IFSC Codes of 175 Banks in India! It is easy for you to find respective bank and it's branch information which updated by adding IFSC codes of banks as they are provided by RBI.

    In order to find IFSC code of a branch, click below on respective bank then followed by state, district and branch. You can also find branch details by using IFSC Code at http://bankcodeifsc.com/searchby_ifsc

    List of Banks with IFSC codes

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி