10ம் வகுப்பு செய்முறைதேர்வு தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2016

10ம் வகுப்பு செய்முறைதேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதியை அறிவித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.


ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார்.

6 comments:

  1. 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்குவது ஜனவரி யா இல்லை பிப்ரவரி மாதமா என்பதை தெளிவு படுத்தவும்.....

    ReplyDelete
  2. ஆறு முதல் பனிரெண்டு வரை தமிழ் மற்றும் ஆறு முதல் பத்து வரை வரலாறு,புவியியல் ,குடிமையியல்,பொருளியல் என சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளது மிக குறைவான விலையில் RS220/- மட்டும் contact No 9994850943

    ReplyDelete
  3. பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2016பிப்ரவரி 22 ல் தொடங்கி நடைபெறும் எனத் தேர்வுத்துறை இயக்குநர் 05.01.16 ல் செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது ஜனவரி 22ல் துவங்குகிறது என தங்களது இளையத்தில் தகவல் எது சரி?

    ReplyDelete
  4. பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2016பிப்ரவரி 22 ல் தொடங்கி நடைபெறும் எனத் தேர்வுத்துறை இயக்குநர் 05.01.16 ல் செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது ஜனவரி 22ல் துவங்குகிறது என தங்களது இளையத்தில் தகவல் எது சரி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி