18 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளமின்றி திண்டாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2016

18 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளமின்றி திண்டாட்டம்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு, 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால்அவதிக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்கூறியதாவது:


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 7,979 பட்டதாரி ஆசிரியர்களும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலமாக 6,872 பட்டதாரி ஆசிரியர்களும், 1,590 முதுகலை ஆசிரியர்களும், 1,764 ஆய்வக உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.சம்பளம் வழங்குவதற்கான ஆணை மாதம்தோறும் தாமதமாக வழங்கப்படுகிறது.


இதனால் கடந்த 7 மாதங்களாக, சம்பளம் பெறுவதில்ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருவூலத்தில் கேட்டால் எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால் நிதித்துறை தாமதம்என அலைக்கழிக்கின்றனர்.ஒவ்வொரு மாதமும் ஊதியம் 15ம் தேதி முதல் 20ம் தேதிக்கு இழுத்தடிக்கப்படுகிறது. மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன், வங்கிக்கடன், பால், மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு செலவு, வாகனங்களுக்கு பெட்ரோல், பஸ் செலவிற்கு கூட பணம் இல்லாமல்அவதிப்படுகிறோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 comments:

  1. Concern officer please solve teachers salary problems immediately.

    ReplyDelete
  2. Concern officer please solve teachers salary problems immediately.

    ReplyDelete
  3. ஆறு முதல் பனிரெண்டு வரை தமிழ் மற்றும் ஆறு முதல் பத்து வரை வரலாறு,புவியியல் ,குடிமையியல்,பொருளியல் என சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளது மிக குறைவான விலையில் RS220/- மட்டும் contact No 9994850943

    ReplyDelete
  4. I AM WORKING IN KRISHNAGIRI DT MATHS BT ANY MUTUAL TRANSFER FROM DHARMAPURI, ERODE, NAMAKKAL, SALEM PLEASE CONTACT 9894067198

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி