ஆசிரியர் சங்கத் தலைவர் தொடுத்த வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2016

ஆசிரியர் சங்கத் தலைவர் தொடுத்த வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதவீதம் இடங்களை பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.


இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளதா என பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.மாற்றுத் திறனாளிக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யாததால், தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு வாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் எனஐகோர்ட் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

    உச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு

    ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்

    கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.

    ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.

    வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.

    அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.


    அன்புடன்

    கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்

    ReplyDelete
  2. Yes sir tet case details please update

    ReplyDelete
  3. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி