சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2016

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி,


2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்புஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

18 comments:

  1. வேலை தேர்தல் முன்பு கிடைக்க வாய்ப்பு இருக்க

    ReplyDelete
    Replies
    1. ...........
      ..............
      ...................
      ..........................
      .............................

      Delete
    2. Neela kandan sir............ la yenna fill panradhu??????

      Delete
  2. ADW 30% SGT POSTINGS-

    1.அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    2.அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

    3.ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.


    4.மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

    5.எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

    6.ஒரு வேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

    7.ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது.

    (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

    8.இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

    * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

    9."இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

    10.திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

    11.எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

    12.இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

    13.மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்.

    [Said by hon’ble retired JUSTICE.]

    (our sincere thanks to justice sir) .

    (barathi7628@gmail.com)

    ReplyDelete
  3. Tet case eppa mudiyum sir. Thirumbiyum hearing hearing nu aguma illa ethavathu mudivu varuma.

    ReplyDelete
  4. Remember 25.1.2014 my CV date ennayoda 2 years complete

    ReplyDelete
  5. Remember 25.1.2014 my CV date ennayoda 2 years complete

    ReplyDelete
  6. Next govt DMK conform don't feel (tet students) weightage cancel

    ReplyDelete
  7. Tet I'll 82 mark vakigoduthver Ramadoss' Krishna samy 100 year valka

    ReplyDelete
  8. Weightage system gonduvathurgu 10000000 year (VALkA)

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. 4.1/2. years life waste a pochu goverment examum vaikale postingm ille all part time teacher life ???...

    ReplyDelete
  11. Thanks for kalviseithi give more news regarding part time teacher we are expecting good news .

    ReplyDelete
  12. Sir tet case details please any one who know kindly update

    ReplyDelete
  13. When is the tet case hearing?please update it friends is it alive?


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி