20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2016

20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலைநடத்தியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாகஈடுபட்டு உள்ளது.


இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி திங்கள்கிழமை துவங்குகிறது. வரும் 20ஆம் தேதி அந்தந்தத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இறுதிப் பட்டியலை வெளியிடுவர்.வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிக்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் கோரி, வாக்காளர்கள் விண்ணப்பித்தனர். மாவட்ட அளவில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், பெயர் சேர்க்கக் கோரி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விண்ணப்பங்கள் பரிசீலனை, கள ஆய்வு உள்ளிட்டவை நடைபெற்றன. தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் இருக்கின்றனர்.


1-1-2016 அன்று 18 வயது பூர்த்தியானவர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.கடந்த 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், 20-ந் தேதி (நாளை மறுநாள்) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வாக்காளர்களின் கூடுதல் வசதிக்காக, 22-ந் தேதி இறுதிவாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.


வருகிற 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், திருத்தம் கோரியவர்களுக்கும் அன்று முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும்ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலை இருப்பதால், மொத்தம் 75 ஆயிரம்வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியிலோ, மார்ச் மாதம் முதல் வாரத்திலோ தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி