5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்விஇயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2016

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்விஇயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர் டி.கனகராஜ் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அரசாணைப் பெற்று, 5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். சிறுபான்மை உரிமைப் பெற்ற பள்ளி நிர்வாகங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஊதியம்வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மறியல் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பக்தவத்சலம், ஜேக்டோ அமைப்பாளர் பூபாலன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பேசினர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்டஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டனர்.

31 comments:

  1. மதிப்பிற்குரிய தாய் உள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,

    தமிழக சட்டசபையில் விதி எண் 110 யின் மூலம் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு மூலம் எங்கள் தலை விதியை மாற்றி வாழ்வு அளித்த தங்க தாயே!!!

    மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களின் சார்பாக நான் உங்களிடம் எங்களது கோரிக்கையை உங்கள் பொற்பாதங்களில் முன்வைக்கிறேன்,

    கருணையின் வடிவாக எங்களுக்கு நீங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வை நீதிமன்றம் வரை சென்று நிறுத்தி விட்டார்கள், தாங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வு மூலம் என்னற்ற சகோதர சகோதரிகள் அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார்ப்பள்ளி என பணி புரியும் மற்றும் பணியை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மதிப்பெண் தளர்வை உறுதி செய்ய ஆவண செய்ய அனைவரின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

    அன்பே உருவான அன்னையே!!!

    தமிழக மக்களின் நல்வாழ்வை மட்டும் என்றும் நினைக்கும் நீங்கள் தற்சமயம் அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆவண செய்யும் பட்சத்தில் 2013 தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களையும் கைவிடாது எங்களுக்கும் சேர்த்தே பணி நியமனம் செய்யவேண்டுமாய் தாழ்ந்தப்பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்,

    பாசமிகு தாயே!!!

    நீங்கள் பாசத்துடன் தந்த மதிப்பெண் தளர்வை ஏற்றுக்கொண்டதை தவிர நாங்கள் வேறு எதையும் செய்ய வில்லை என்பதை தாழ்மையுடன் உங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்,

    ReplyDelete
    Replies
    1. 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்::‍

      அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

      ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

      தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.

      மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

      எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

      ஒருவேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

      ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது. (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

      இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

      * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

      "இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

      திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

      எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

      இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

      Said by hon’ble retired justice (our sincere thanks u sir) .

      (barathi7628@gmail.com)

      Delete
    2. all are ok barathi sir

      but

      case eppo mudiyum ? endru unga justice sir kitta kettu sollunga sir

      raja yuvaraj rajalingam akilan sir's & friends

      adw 30% case and postings eppo finish agum ?????

      raja sir namma adw case eppo mutiyum???

      Delete
    3. MR.saravanan wait pannunga.

      court and govt is not pettikkadai

      court and govt has lot of formalities , rules ,procedures .....

      may be this febraury confirm 30% postings filled by sc

      or atleast ranklist (by trb with sc canditates) will
      published.

      Delete
    4. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

      உச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு

      ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்

      கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.

      ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.

      வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.

      அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.

      அன்புடன்

      கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்

      Delete
  2. Sir idai cm ammavukku anuppuneengala?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஆனால் AIDMK Face book linkil அனுப்பி உள்ளேன்.,

      Delete
  3. Sir 5% talarvil ullavargal govt aided schoolil seralama?

    ReplyDelete
    Replies
    1. சேரலாம் ஆனால் 5% வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் சேர்த்து கொள்ளுவார்களே என தெரியாது..,

      Delete
  4. வழக்கு பற்றிய தகவல் தெரியவில்லை நண்பர்களே

    ReplyDelete
  5. 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்::‍

    அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

    ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.

    மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

    எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

    ஒருவேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

    ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது. (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

    இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

    * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

    "இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

    திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

    எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

    இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

    Said by hon’ble retired justice (our sincere thanks u sir) .

    (barathi7628@gmail.com)

    ReplyDelete
  6. Tet case detailscandidatest month some people told today 27.01.2016 hereing in supreme court ..whether it is right r wrong I don't know.. Any body knows that details tell us..which is Helpful to all candidate

    ReplyDelete
  7. Tet case detailscandidatest month some people told today 27.01.2016 hereing in supreme court ..whether it is right r wrong I don't know.. Any body knows that details tell us..which is Helpful to all candidate

    ReplyDelete
  8. what about

    tet case in supreme court????????????????

    and

    adw 30 % sgt case in madurai ???????????

    ReplyDelete
  9. MR.saravanan wait pannunga.

    court and govt is not pettikkadai

    court and govt has lot of formalities , rules ,procedures .....

    may be this febraury confirm 30% postings filled by sc

    or atleast ranklist (by trb with sc canditates) will
    published.

    ReplyDelete
  10. Supreme court office report (dated-17-01-2015)related to TNTET case,one detail-SLP-34568(STATUS=PENDING)=A.CHITHRA vs SEC.TO.GOVT.SCHOOL EDUCATION(TRB)DEPT. BUT in the SLP.NO. is wrong in the supreme court office report(32568-32569)=K.R.RAMASWAMY ALIAS TRAFFIC RAMASWAMY(DISPOSED IN 05.12.2015)

    ReplyDelete
    Replies
    1. பிரபு அவர்களே நீங்கள் மேலே கூறிய வழக்கு எண் 29245 என்ற எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

      Delete
  11. இதுபோன்ற இனையதளங்களை பார்ப்பதை தவிர்த்தால் சற்று நிம்மதி அடையலாம்.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

    உச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு

    ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்

    கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.

    ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.

    வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.

    அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.

    அன்புடன்

    கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்

    ReplyDelete
  13. Government Aided School. Virudhunagar district.SBK.Kaloorani. ..Tet pass above 90.. ...SC.SCIENCE ... & SCA science wanted. Pls contact this no.7598088571.

    ReplyDelete
  14. Admin please update tntet case deatails

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி