உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.


தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.மாநில தலைவர் இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் ஒரு கல்வி தகுதிக்கு 6 சதவீத ஊக்க ஊதியம், இரண்டு கல்வி தகுதிக்கு (முதுநிலைபடிப்பு) 12 சதவீத ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.பள்ளிச் செயலரிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி