குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2016

குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்.


குழந்தைகளுக்கு தாயின் கவனிப்பு தேவை என்பதால், பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. எனினும், குழந்தைகளுக்கு, 18 வயதாகிவிட்டால்,இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.இந்நிலையில், குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக, ஒரே கட்டமாக, ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்க, பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள, பெண்கள், ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டால், உடன் வழங்க வேண்டும் எனவும், உயர் அதிகாரி களுக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.


இது தொடர்பான கருத்துகளை, 27ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி