சத்துணவு பணியாளர்கள் பிப்.8ல் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2016

சத்துணவு பணியாளர்கள் பிப்.8ல் உண்ணாவிரதம்

பணிவரன் முறை, அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் பிப்., 8ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.மதுரையில் சங்க மாநில பொது செயலாளர் அயோத்தி கூறியதாவது:


சத்துணவு பணியாளர்களுக்காக தனித்துறையை அரசு ஏற்படுத்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி விதிகளை ஏற்படுத்தி, பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு பணி நிலைக்குஏற்ப, அரசு ஓய்வூதியவிதிப்படி அகவிலைப்படியுடன் மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பொங்கல் கருணைத்தொகை, மருத்துவ காப்பீடு, பணிக்கொடை போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்.பள்ளிகளில் காலி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே நியமிக்கும் அரசு உத்தரவை மாற்றி, கிராம இளைஞர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பணி நிலை உயர்வு வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாநில செயற்குழு முடிவின்படி காலவரையற்ற உண்ணாவிரதம் 2016 பிப்., 8 ல் சென்னை எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகில் துவங்கவுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி