2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) ஜனவரி 11 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேரலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பை நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 11 வரை சி.பி.எஸ்.இ. நீட்டித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை 12-ஆம் தேதி வரை செலுத்தலாம்.தேர்வு தேதி: ஜே.இ.இ. எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியிலும், ஆன்-லைன் தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in இணையதளத்தில் அறியலாம்.
Jan 1, 2016
Home
kalviseithi
J.E.E.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
J.E.E.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி