கலை வடிவம் பெறும் காகிதக் குப்பை: செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

கலை வடிவம் பெறும் காகிதக் குப்பை: செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் தொண்டாமுத்தூரை ஒட்டியுள்ள கிராமம் தேவராயபுரம். சுற்றியுள்ள கிராம மக்களின் குழந்தைகளின் கல்வி வசதிக்காக தேவராயபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.


360 மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.மாணவர்களால் நோட்டு புத்தகங்களிலிருந்து கிழிக் கப்படும் காகிதங்கள் குப்பையாகச் சேருகின்றன. அவை எளிதில் மட்கக் கூடியதாக இருந்தாலும், மறுசுழற்சிக்கோ, வேறு பயன்பாட் டுக்கோ உபயோகிக்கப்படுவ தில்லை. ஆனால் தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் சேகரமாகும் காகிதக் குப்பைகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.இப்பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக பணியாற்றும் வி.ராஜகோபால், எளிமையான முறையில்மாணவர் களுக்கு ஓவியப் பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, குப்பையாக ஒதுக்கும் காகிதங்களை வைத்து புதுமையான வடிவங்களைத் தயாரிக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.கசக்கி எறியப்படும் காகிதங் களை நூலால் சுற்றி மனித, விலங்கு உருவங்களுக்குஏற்ப மாணவர்கள் வடிவங்களை உருவாக்கி வரு கின்றனர். இதனால் குப்பையாகச் சேரும் காகிதங்கள் குறைந்து, அதை பயனுள்ள கலைப் பொரு ளாக மாற்றும் ஆர்வம் மாணவ, மாணவிகளிடையே அதிகரித் துள்ளது.துல்லிய உருவம் கொடுக்கப் படாத வடிவங்களாக கலைப் பொருட்கள் உருவாக்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.


ஆயிரக்கணக்கில் செலவு செய்து இதுபோன்ற பொருட்களை செய்து காட்டுபவர்கள் மத்தியில், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறிதும் செலவில்லாமல் அநாயசமாக பல உருவங்களை செய்து பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர்.குறிப்பாக பாரம்பரிய பறை இசைக் கருவிகளை வாசிக்கும் மனிதர்கள், கூடுகளில் தங்கும் பறவை, காரமடை அரங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற பந்தசேவை, மரத்தடி விநாயகர் என அன்றாடம் பார்த்து பழக்கப்பட்ட, மண்ணின் பெருமையைக் கூறும் படைப்புகளை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.ஓவிய ஆசிரியர் ராஜகோபால் கூறும்போது, ‘பள்ளி மாணவர்களை யும், காகிதங்களையும் பிரிக்க முடியாது.


அவர்களுக்கும் காகிதத் துக்குமான நெருக்கம் மிக அதிகம். ஏதாவதொன்றை அவர்களே செய்து காட்டுவார்கள். அதன் அடுத்தகட்டமாக எளிய முறையில் வீணான காகிதம், நூல், பசை மூலம் அரூப (abstract) உருவம் உருவாக்கப் பயிற்சி கொடுத்தேன்.இன்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பல படைப்புகளை மாணவர்கள் உருவாக்கிவிட்டனர். வீணாகும் பொருளும் பயனளிக் கும் என்பதற்கு இது உதாரணம்.அதைத் தாண்டி மாணவர்களுக்கு பொறுமை, நினைவாற்றல் அதிக மாவதை பார்க்க முடிகிறது. காகிதத்தில் உருவாகும் வடிவங் களில் அழகுணர்ச்சி குறைவாக இருந்தாலும், திறமையை வெளிப் படுத்த ஒருவாய்ப்பாக இருக்கிறது.


அந்த வகையில், நமது பாரம் பரிய, கலாச்சார மாண்புகளை காகித உருவங்களில் மாணவர் கள் உருவாக்குகின்றனர். இதில் பெரிய செலவுகள் ஏதுமில்லை. காகிதக் குப்பை குறைகிறது. பெற் றோரும் ஊக்குவிக்கிறார்கள். மாணவர்களுக்கு கலை உணர்வு மேலோங்குகிறது. இப்படி பல நன்மைகள் இதில் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனுக்கும் எண் ணமும், அழகுணர்ச்சியும் மாறு படும், ஆச்சரியப்படுத்தும். 2 டி உருவ அமைப்புகளை கையா லேயே எளிய முறையில் உரு வாக்கும் அளவுக்கு அவர்களது திறமை மேம்பட்டுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி