பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்; மாணவர்களின் தரம் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2016

பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்; மாணவர்களின் தரம் ஆய்வு

கோவை:பொதுத்தேர்வில் மாவட்ட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் நடந்த அனைத்து தேர்வுகளின் முடிவையும் ஆய்வு செய்து சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வரும்,மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. அரையாண்டு தேர்வுகள்தற்போது நடந்து வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும்,அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களுக்கு இரண்டு முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இக்கல்வியாண்டில்,அதற்கான போதிய நேரங்கள் இன்மையால் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க,சிறப்பு தலைமையாசிரியர்கள் கூட்டம், 19ம்(இன்று ) தேதி நடத்தப்படுகிறது.


இக்கூட்டத்தில்,இக்கல்வியாண்டு முழுவதும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சிகள்,தேர்வுகளின் விபரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,கடந்த கல்வியாண்டு தேர்வுகளில், 70க்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்ற பள்ளிகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.அரையாண்டு தேர்வுக்கான பாடங்கள் ஒவ்வொன்றாக முடிய,விடைத்தாள்களை விரைவாக திருத்தி மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,சராசரிக்கும் குறைவான மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி