உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2016

உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து

பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.


தற்போது வரை வாட்ஸ் ஆப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி