புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2016

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


ஒருவேளை புத்தாண்டு அன்று பணிக்கு வர ஊழியர்கள் தவறும் பட்சத்தில் அன்றிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் தள்ளிப்போகலாம்.முன்னதாக, துணை ராணுவப் படையும் தங்களது அதிகாரிகளிடம், புத்தாண்டு தினத்தில்விடுப்பு எடுத்தால், மீண்டும் பணியில் சேரும் நாளில் இருந்தே ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி