சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2016

சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும்.இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும்,உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள்.பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாக உள்ளதால், தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள்முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள்,காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு 31.8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.என்னுடைய இந்த நடவடிக்கையின் மூலம் 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுவர்.ஏழை, எளிய, சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இதுவழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி