தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2016

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்றுநாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிருமாதங்களில் நடைபெற உள்ளது.


எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்புஅலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறுபயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி