சென்னை, ஜன.12-சென்னை ஐகோர்ட்டில், இந்திய சிலம்பம் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.கேசவன் மனு ஒன்றைதாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்திய சிலம்பம் கூட்டமைப்புதான் முதலில் தொடங்கப்பட்ட அமைப்பாகும். எங்கள் அமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின், தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.எங்கள் கூட்டமைப்பு விதிகளின்படிதான் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 16-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 61-வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டியில், எங்கள் அமைப்பை சேர்க்காமல், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமெச்சூர் சிலம்பம் கூட்டமைப்பை சேர்த்துள்ளனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்திய விளையாட்டுகள் கூட்டமைப்பு விதிமுறைகளின்படி, இப்போட்டிகளில் சிலம்பம் போட்டியை நடத்த தடைவிதிக்க வேண்டும்’என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம் போட்டியை நடத்த தடைவிதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
Jan 12, 2016
Home
kalviseithi
தேசிய பள்ளி விளையாட்டு: சிலம்பம் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய பள்ளி விளையாட்டு: சிலம்பம் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி