சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2016

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்

அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான்பிரிட்டோ முதலிடம் பெற்றார்.பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார்.


திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினேஷ் சான்செட்டி 566 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.இந்திய பட்டய கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப்ஒன்று பிரிவில் நவம்பர் மாதம் தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல குரூப் 2 பிரிவில் தேர்வு எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரு தேர்வுகளையும் எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் ஏதாவது ஒரு குரூப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி