சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2016

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் உதவித்தொகைமத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.) சார்பில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.


இந்த தேர்வில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மராட்டிய அரசு மாதந்தோறும்ரூ.10 ஆயிரம் ஊக்கதொகை வழங்க திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பயிற்சி மையங்கள்இதற்காக மும்பை, நாக்பூர், கோலாப்பூர், அமராவதி, அவுரங்காபாத், நாசிக் ஆகிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இந்த புதிய திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.23.46 கோடி கூடுதல் செலவாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி