வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தை, சென்னை நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.மனுதாரர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவு செய்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45வயதுக்கு மிகாதவராகவும், தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவும், ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர் பதிவேட்டில் இருந்தால், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில்சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி