போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை,அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இவர்களே குற்றவாளிகள் என்பது போல் பார்ப்பதும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது.


இதற்கு பயந்தே சாலை விபத்துகளின்போது பலர் ஒதுங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘முறையாக செயல்படும் விதிமுறை களை’ (ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் புரசீஜர்) வெளியிட்டுள்ளது. அதன் விதிமுறைகள் வருமாறு:

* சாலை விபத்தில் சிக்கியவர்கள் பற்றி போலீஸுக்கு தகவல் அளிப்பவர்களோ அல்லது அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களையோ மரியாதை யாக நடத்த வேண்டும்.
* விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களிடம் அவர் களுடைய முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்கக் கூடாது. சாட்சி சொல்ல அவர்களாக விரும்பி விவரங்களை கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
* உதவி செய்பவர்கள் சாட்சி சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் விசாரணை அதிகாரி சந்திக்க வேண்டும். அதுவும் அவருடைய வீடு அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்தலாம். உதவி செய்தவரை விசாரிக்கச் செல்லும் போது, போலீஸார் சீருடையில் செல்லக்கூடாது, சாதாரண உடையில்தான் செல்ல வேண்டும்.* ஒருவேளை சாலை விபத்தை நேரில் பார்த்து பாதிக்கப் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தவரே போலீஸ் நிலையம் வந்து விரிவான தகவல்கள் தர ஒப்புக் கொண்டால், நியாயமாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் அவரிடம் ஒருமுறை மட்டும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

பல முறை வரவழைத்து அலைக்கழிக்க கூடாது.* உதவி செய்தவர் பேசும் மொழி, விசாரணை அதிகாரிக்கு தெரியாவிட்டால், மொழிபெயர்ப் பாளரை அதிகாரியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக சாலை விபத்து களில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வருவோரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 50 சதவீதம் பேரை சரியான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களின் உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

7 comments:

  1. அருமையான திட்டம்
    உதவும் உள்ளங்களுக்கு இனி பிரச்சனை இல்லை

    ReplyDelete
  2. vilakkam koduthatharkku thanks. payanulla thagaval.

    ReplyDelete
  3. தானம் கொடுக்கிற மாட்ட பல்ல பிடித்துப் பார்க்காமல் இருந்தால் சரி

    ReplyDelete
  4. தானம் கொடுக்கிற மாட்ட பல்ல பிடித்துப் பார்க்காமல் இருந்தால் சரி

    ReplyDelete
  5. தானம் கொடுக்கிற மாட்ட பல்ல பிடித்துப் பார்க்காமல் இருந்தால் சரி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி