போட்டித் தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவ பிரெய்லி புத்தகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

போட்டித் தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவ பிரெய்லி புத்தகங்கள்

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இணை இயக்குநர் தகவல்போட்டித்தேர்வுக்குப் படிக்கும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பிரெய்லி புத்தகங்களை வாங்கிக்கொடுக்க அரசு தயாராக இருப்பதாக வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித்துறை இணை இயக்கு நர்டி.விஜயகுமார் தெரிவித்தார்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோ ருக்கான 3 நாள் கல்வி- வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு திடல் வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை தாங்கி னார். கருத்தரங்கை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) டி.விஜயகுமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு மத் திய, மாநில அரசு வேலை வாய்ப் பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான காலியிடங் களைநிரப்புவதற்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்வந்தவண்ணம் உள்ளன. இதற் கான தேர்வுகளுக்கு பார்வையற்ற வர்களை தயார்படுத்தும் வகை யில் சென்னை கிண்டியில் விரை வில் சிறப்பு பயிற்சி அளிக்க உள் ளோம்.டிஎன்பிஎஸ்சி, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன், பேங்கிங், ரயில்வே என பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளுக்குப் பார் வையற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வெழு தும் மாணவர்களுக்கு உதவுவதற் கென ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) இயங்கு கிறது. இங்கு போட்டித்தேர்வுக் கான அனைத்துப் பாடப்புத்தகங் களும் உள்ளன.

மேலும், போட் டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி யும் நடத்தப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு தேவைப்பட்டால் பிரெய்லி புத்தகங்களையும் வாங்கிக்கொடுக்க தயாராக இருக் கிறோம். புத்தகங்கள் வாங்குவதற் கென அரசு கூடுதலாக ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது.அரசு அளிக்கின்ற வாய்ப்பு வசதிகளை பார்வையற்றவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதியலாம் என்றாலும் பார்வையற்றவர்கள் கல்வித்தகுதி மற்றும் மருத்துவ சான்றிதழுடன் நேரில் சென்றுதான் பதிவுசெய்ய வேண்டும். பார்வை யற்றோருக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டால் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற் றுத்திறனாளிகள் வேலைவாய்ப் பற்றோர் உதவித்தொகையை பெறத் தகுதியுடையவர். ஆவர். இதன்படி, எஸ்எஸ்எல்சி முடித்தவர் களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டப் படிப்பு மற்றும்முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.

 இந்த உதவித் தொகையை 10 ஆண்டுகள் பெற லாம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வது, போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பல் வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். முன்னதாக, பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.பக்கிரி சாமி வரவேற்றார். துணைத்தலை வரும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியையுமான ராஜேஸ் வரி அறிமுகவுரை நிகழ்த்தினார். நிறைவாக, பொதுச்செயலாளர் வி.எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

21 comments:

  1. ஆதி திராவிடர் நல துறைக்கான 30 % இடைநிலை ஆசிரியர் பணி நியமன வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் ?

    ReplyDelete
  2. ஆதி திராவிடர் நல துறைக்கான 30 % இடைநிலை ஆசிரியர் பணி நியமன வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் ?

    ReplyDelete
  3. Pgku welfar and corpration list varuma?

    ReplyDelete
  4. pg trb varuma? or second list ?

    ReplyDelete
  5. எத்தனை முறை சொன்னலும் திரும்ப திரும்ப TRB வருமா? டெட் வருமா? இரண்டாவது பட்டியல் வருமா? என்பதை கேக்கதீர்கள்...

    எதுவும் நடைபெறாது....

    2016 தேர்தல் முடிந்தால் தான் எல்லாம் நடைபெறும்...

    ReplyDelete
  6. exam varum nu nambi velaya vitutu exam ku prepare pandradhu matumey velaya erukuravangaluku puriyum.

    ReplyDelete
  7. Sgt SC 30 % case ennada aachu??............

    ReplyDelete
  8. Replies
    1. enna sir think pandradhu? onnu exam or seniority. teaching job kaga wait pandravanga idhula yedhu best nu dhan think panna mudiyum. vera vazhi ???

      Delete
    2. சீனியாரிட்டி - என்றாவது ஒரு நாள் வேலை நிச்சயம் .

      டிஇடி (வெய்டேஜ் )- என்றுமே வேலை கிடைக்காது .
      பாஸ் செய்தாலும் மதிப்பெண் உயர்வுக்கு வருடா வருடம் எழுத வேண்டிய நிர்பந்தம் .

      இன்னும் பல பித்தலாட்டங்கள் தன் சொந்தக்காரனை போலி சான்றிதழ் வாங்கி கொடுத்து வேலைக்குசேர்த்து நம்மை போன்ற தேர்வர்கள் வாயில் மண்ணை போடுவது .

      அறிவுள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் .

      அறிவற்ற மாக்கள் " நெடுஞ்சாண் கிடையாக" காலில் விழுந்து மீண்டும் மிதி வாங்குங்கள் .

      Delete
    3. சீனியாரிட்டி - என்றாவது ஒரு நாள் வேலை நிச்சயம் .

      டிஇடி (வெய்டேஜ் )- என்றுமே வேலை கிடைக்காது .
      பாஸ் செய்தாலும் மதிப்பெண் உயர்வுக்கு வருடா வருடம் எழுத வேண்டிய நிர்பந்தம் .

      இன்னும் பல பித்தலாட்டங்கள் தன் சொந்தக்காரனை போலி சான்றிதழ் வாங்கி கொடுத்து வேலைக்குசேர்த்து நம்மை போன்ற தேர்வர்கள் வாயில் மண்ணை போடுவது .

      அறிவுள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் .

      அறிவற்ற மாக்கள் " நெடுஞ்சாண் கிடையாக" காலில் விழுந்து மீண்டும் மிதி வாங்குங்கள் .

      Delete
  9. Supreme court ordered to fill all vacancy through exam only...not seniority..

    ReplyDelete
    Replies
    1. நியமனங்கள் செய்ய மட்டுமே பரிட்சை .சீனியாரிட்டி க்கு வெய்டேஜ் மதிப்பெண் தரலாமே ?
      சீனியாரிட்டியை கணக்கில் கொள்ளக்கூடாது என்று SC சொல்லவில்லை .

      பிஜி டிஆர்பி யில் சீனியாரிட்டிக்கு மதிப்பெண்கள் தருவது கூடவா இந்த " செம்பர வாக்கத்தம்மா" க்கு தெரியாது ?

      பாவம் , போயஸ் டூ கொடநாடுக்கு செல்லத்தான் நேரம் இருக்கும் போல .

      பிப்ரவரி முதல் வாரம் என்பது பிப்ரவரி 23 தள்ளிப்போயுள்ளது .
      நாட்கள் எண்ணப்படுகிறது .

      மீண்டும் 123456 போக போவதென்னமோ உண்மை தான் .

      Delete
    2. நியமனங்கள் செய்ய மட்டுமே பரிட்சை .சீனியாரிட்டி க்கு வெய்டேஜ் மதிப்பெண் தரலாமே ?
      சீனியாரிட்டியை கணக்கில் கொள்ளக்கூடாது என்று SC சொல்லவில்லை .

      பிஜி டிஆர்பி யில் சீனியாரிட்டிக்கு மதிப்பெண்கள் தருவது கூடவா இந்த " செம்பர வாக்கத்தம்மா" க்கு தெரியாது ?

      பாவம் , போயஸ் டூ கொடநாடுக்கு செல்லத்தான் நேரம் இருக்கும் போல .

      பிப்ரவரி முதல் வாரம் என்பது பிப்ரவரி 23 தள்ளிப்போயுள்ளது .
      நாட்கள் எண்ணப்படுகிறது .

      மீண்டும் 123456 போக போவதென்னமோ உண்மை தான் .

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி