முறைகேடு புகார் - தர்மபுரி DEEO., சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2016

முறைகேடு புகார் - தர்மபுரி DEEO., சஸ்பெண்ட்

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம், பதவி உயர்வு, மற்றும் அலுவலக பணியிடங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்று வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு புகார் சென்றது.


இப்புகார் குறித்து நடந்த விசாரணையில், மணி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மணியை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.போலியாக ஜாதி, கல் விச்சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தொடர்பாக பாலக்கோடு பாரதியார் நகரை சேர்ந்த முனியப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி