TET தேர்வு வைக்காததால் அவதிப்படும் ஆசிரிய சமூகம்!தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2016

TET தேர்வு வைக்காததால் அவதிப்படும் ஆசிரிய சமூகம்!தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!!

கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.


கடந்த 2½ ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இந்த 2016 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளனர்.


காரணம் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு அவர்களின் நிலையும் பணியும்.... கேள்விக்குறி என்பதை கடந்த பல நாட்களாக ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களில்... ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.


பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...ஒரு சில ஆசிரியர்களுக்கு...

* வளரூதியம் இல்லை.

* ஊக்க ஊதியம் இல்லை.

* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.

* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.

* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.

* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.

* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.

* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.

* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.

* வரையறை விடுப்பு இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.


இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.தமிழக முதல்வர் இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுவிலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்பது உண்மை.


இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்தகொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுகின்றனர்.இந்த 2016 ஆம் ஆண்டு இவ்வகையான ஆசிரியர்களுக்கு கருப்பு ஆண்டாக மாறாமல் வெளிச்ச ஆண்டாக மாற்றம் பெறுவது தற்போதைய தமிழக அரசின் கருணையில் தான் உள்ளது.


ஆக்கம்:-

தென்னகக் கல்விக் குழு.

16 comments:

  1. தகுதியிருக்க தகுதி தேர்விருந்து விலக்கு கோருவதை விட்டுட்டு, தகுதி தேர்வை நடத்தச் சொல்லி அதில் தேர்ச்சியடைந்து அதன் மூலம் நியமனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.பணம் இருந்திருந்தால் இங்கே பல்லாயிர கணக்கானோர் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரே அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமன ஆனையை பெற்றிருப்பர்.

    ReplyDelete
    Replies
    1. சரிங்க சார். நீங்களே சொல்லுங்க தமிழ்நாட்டில் இந்த அரசாணை 15.11.2011 அன்றுதான் அமலுக்கு வந்தது. ஆனால் 23.8.2010 முதல் சொல்லி 23.8.2010 to 14.11.2011 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களை எழுத சொல்கிறார்கள் இது நியாயமநியாயமா நீங்களே சொல்லுங்க

      Delete
    2. Next Tet Case hearing date please update

      Delete
  2. தகுதியிருக்க தகுதி தேர்விருந்து விலக்கு கோருவதை விட்டுட்டு, தகுதி தேர்வை நடத்தச் சொல்லி அதில் தேர்ச்சியடைந்து அதன் மூலம் நியமனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.பணம் இருந்திருந்தால் இங்கே பல்லாயிர கணக்கானோர் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரே அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமன ஆனையை பெற்றிருப்பர்.

    ReplyDelete
  3. Enn'amma' epidi panringile'amma'

    ReplyDelete
  4. முன்தேதியிட்டு பல்லாயிர கணக்கானோரை படுகுழியில் தள்ளி சாகடிப்பது அவர்களுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் என்பதை இப்போது தான் அனைவரும் நம்ப தொடங்கியுள்ளார்கள். விரைவில் மாற்றம் வரும் திரு.முருகன் அவர்களே.....
    நானும் வேறொறு விதத்தில் இந்த அரசாங்கத்தால் கழுத்தறுக்கப்பட்டவன் தான். கதறினேன், இன்னும் அந்த வலியால் கதறி கொண்டிருக்கிறேன். ஒரு பரம ஏழை பல பத்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை ஒரே நாளில் ஒரு கள்வனால் களவாடப்பட்டால் அந்த ஏழை எவ்வளவு துயரம் கொள்வானோ அதை விட பல நூறு மடங்கு துயரத்தை நான் ஏமாற்றப்பட்ட போது அடைந்தேன். இன்னமும் அந்த வலியை அனுபவித்த கொண்டிருக்கிறேன். யாருடைய நயவஞ்சகத்திற்கு நான் என் வாழ்வாதரத்தை இழந்தேன்.
    நெஞ்சத்தில் கொஞ்சமும் நிம்மதியில்லை.
    இரத்தம் சூடேறுவதால் நி்த்திரையில்லை.
    என் உணர்வுகளை எழுத்தினில்
    வெளிப்படுத்த வார்த்தையுமில்லை...
    தவறு இருப்பின் மன்னிக்கவும் நண்பர்களே.

    ReplyDelete
  5. முன்தேதியிட்டு பல்லாயிர கணக்கானோரை படுகுழியில் தள்ளி சாகடிப்பது அவர்களுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் என்பதை இப்போது தான் அனைவரும் நம்ப தொடங்கியுள்ளார்கள். விரைவில் மாற்றம் வரும் திரு.முருகன் அவர்களே.....
    நானும் வேறொறு விதத்தில் இந்த அரசாங்கத்தால் கழுத்தறுக்கப்பட்டவன் தான். கதறினேன், இன்னும் அந்த வலியால் கதறி கொண்டிருக்கிறேன். ஒரு பரம ஏழை பல பத்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை ஒரே நாளில் ஒரு கள்வனால் களவாடப்பட்டால் அந்த ஏழை எவ்வளவு துயரம் கொள்வானோ அதை விட பல நூறு மடங்கு துயரத்தை நான் ஏமாற்றப்பட்ட போது அடைந்தேன். இன்னமும் அந்த வலியை அனுபவித்த கொண்டிருக்கிறேன். யாருடைய நயவஞ்சகத்திற்கு நான் என் வாழ்வாதரத்தை இழந்தேன்.
    நெஞ்சத்தில் கொஞ்சமும் நிம்மதியில்லை.
    இரத்தம் சூடேறுவதால் நி்த்திரையில்லை.
    என் உணர்வுகளை எழுத்தினில்
    வெளிப்படுத்த வார்த்தையுமில்லை...
    தவறு இருப்பின் மன்னிக்கவும் நண்பர்களே.

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி சார். நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யலை. ஆனால் இந்த அரசாணை முன் தேதியிட்டு வந்ததிலிருந்து எனக்கு தினமும் மரண வேதனைதான் இதற்கு ஒரு முடிவு இந்த ஆண்டில் கிடைக்கணும் . எனக்கு தேவை நிம்மதி அதை அந்த கடவுள் கொடுப்பான். தப்பு செய்தவன் மக்கள் கிட்ட இருந்து தப்ப முடியாது

    ReplyDelete
  7. தவராக நினைக்க வேண்டாம் நண்பரே உங்கள் பணி நியமண ஆணையில் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை உள்ளதா நண்பரே எனது ஆணையில் அவ்வாறு இருந்தது ஆனால் நான் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சார் என்னுடைய பணி நியமன ஆணையில் அவ்வாறு எதுவும் இல்லை. ஏனெனில் நான் தமிழ்நாட்டில் இந்த ஆணை 15.11.2011 வருவதற்கு முன் பணி நியமனம் பெற்றவன்

      Delete
  8. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4,VAO பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல் - 1
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    VAO Administration full details - 1
    மொத்தம் 8 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2500ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 2000 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  9. 15.11.2011 முன் பணி நியமனம் பெற்றவர்கள் தகுதித்தேர்வு தேர்வு தேர்ச்சி பெறத் தேவையில்லை நண்பர்களே

    ReplyDelete
  10. 15.11.2011 முன் பணி நியமனம் பெற்றவர்கள் தகுதித்தேர்வு தேர்வு தேர்ச்சி பெறத் தேவையில்லை நண்பர்களே

    ReplyDelete
  11. எப்படி சொல்கிறீர்கள் அரசாங்க ஆணை 23.8.2010 முதல் சொல்கிறார்கள் ஏதாவது proof வைத்துள்ளீர்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி