ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது?

ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணக் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயத்தப்படலாம் என ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே துறை சிக்கியுள்ள நிலையில், வரும் 25ல், தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பயணிகள் மற்றும் சரக்கு போக்கு வரத்து வருவாய் குறைந்துள்ள நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினால், ரயில்வேக்கு, கூடுதலாக, 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, பயணிகள் கட்டணம் 10 சதவீதமும், சரக்கு கட்டணம் 5 சதவீதமும் உயர்த்தப்படலாம் என, தெரிகிறது. எனினும் இது தொடர்பாகஇன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி