அனைத்து ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 10-ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

அனைத்து ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 10-ல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 10-ல் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நெடுஞசாலை சாலை ஆய்வாளர்கள் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூரில் நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன...


தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கத்தின் 2-வது  மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் எஸ்.வி.ஏகநாதன் தலைமை வகித்தார். சக்திவேல் வரவேற்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பி.எஸ்.அப்பர் துவக்கவுரை ஆற்றினார். சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து அறிக்கை வாசித்தார்.இதில், சாலை ஆய்வாளர்களுக்கு முறையான பயணப்படி, 25 கிலோமீட்டருக்கு மேல் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு கூடுதல்பொறுப்புப்படி வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.சாலை ஆய்வாளர் நிலை -1, நிலை -2 பணியிடத்தை இணைத்து சாலைஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தர ஊதியம் ரூ.2600 வழங்க வேண்டும். பொறியியல் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற சாலை ஆய்வாளர்களுக்கு பணி அனுபவ தகுதியைதளர்வு செய்து இளநிலைப் பொறியாளர் மற்றும் இளநிலை வரைத்தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக வரும் 10-ம் தேதி முதல் அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் நடத்தும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கத்தினரும் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கே.பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி