பிப்.13 ல் மதுரையில் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு தினமலர், என்.ஐ.பி., நடத்துகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

பிப்.13 ல் மதுரையில் வி.ஏ.ஓ., மாதிரி தேர்வு தினமலர், என்.ஐ.பி., நடத்துகிறது

மதுரையில் தினமலர் நாளிதழ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்பேங்கிங் (என்.ஐ.பி.,) சார்பில் மாதிரி வி.ஏ.ஓ., தேர்வு பிப்.,13ல் நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 813வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு பிப்.,28ல் தேர்வு நடக்கிறது. இதற்கு 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு தரத்தில் வினாக்கள் இடம் பெறும்.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 80 வினாக்கள், பொது அறிவு- 75, கணிதம் அறிவுக்கூர்மை -20, கிராம நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக -25 என மொத்தம் 200 வினாக்கள் இடம் பெறும். ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்.தேர்வு எழுதப்போகும் வாசகர்கள் நலன் கருதி, ஒவ்வொரு முறையும், இதுதொடர்பான மாதிரி தேர்வை தினமலர் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் பிப்.,13ல் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்கில், காலை 10.00 முதல் 1.30 மணி வரை இத்தேர்வு நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் இன்று மட்டும், 0452- 653 4271, 98426 34271 என்ற எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.தேர்வு எழுதுபவர்களுக்கு நடப்பு நிகழ்வுகள், தேர்வு எழுதும் முறைகள், கிராம நிர்வாகநடைமுறைகள் பற்றிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி