பயம்தானோ...? பயம்தானோ...? ஜாக்டோவிற்கு பயம்தானோ..? ( ஜாக்டோ அடுத்த கட்ட கூட்டம் 13.02.16 அன்று திருச்சியில் கூடுகிறது -இதை அறிவிக்கவே ஜாக்டோவிற்கு 7 நாட்கள் ஆகிவிட்டது ) - kalviseithi

Feb 9, 2016

பயம்தானோ...? பயம்தானோ...? ஜாக்டோவிற்கு பயம்தானோ..? ( ஜாக்டோ அடுத்த கட்ட கூட்டம் 13.02.16 அன்று திருச்சியில் கூடுகிறது -இதை அறிவிக்கவே ஜாக்டோவிற்கு 7 நாட்கள் ஆகிவிட்டது )

பயம்தானோ...?   பயம்தானோ...?             
 ஜாக்டோவிற்கு பயம்தானோ..?
எங்கே போனது..?
எங்கே போனது..? 
2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?
தெரியவில்லையா...?


தெரியவில்லையா...?
அதைவிட பாதிப்பு அதிகம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா...?
அமைந்திடுமா..?
அமைந்திடுமா..?
முதுமை என்ற நோயிற்கு
ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?
அலட்சியமா...?
அலட்சியமா..?
முதுமை கண்ட தலைமைகளே
நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?
கூறிடுக ...?
கூறிடுக...?
3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...
மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
அறிவிக்காதது ஏன் கூறிடுக..?
சுயநலமோ...?
சுயநலமோ...?
8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?
வேகமெடு..வேகமெடு..
இழப்பினை மீட்க வேகமெடு..
குதிக்கின்றோம்..
குதிக்கின்றோம்...
எங்களின் அடியே நெருப்பினைத் தான்..
பற்ற வைத்தது நம் அரசு..
அதனால் கொதித்து குதிக்கின்றோம்..
உணர்ந்தாயோ..?
உணர்ந்தாயோ..?
அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..
மறுக்கிறதோ...?
மறுக்கிறதோ..?
அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?
அழிக்காதே அழிக்காதே..
போட்ட கோட்டை மீண்டும் அழிக்காதே..
ஆரம்பிக்காதே ஆரம்பிக்காதே..
மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்காதே..
குறைக்காதே குறைக்காதே..
போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காதே..
நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு...
அரசு ஊழியர்களுடன் கைகோர்க்க நடவடிக்கை எடு..
யோசிக்காதே யோசிக்காதே..
அரசு ஊழியர்களுடன் இணைய யோசிக்காதே...
இணைந்திடுக இணைந்திடுக...
விருப்பு வெறுப்பினை கலைந்து இணைந்திடுக..
முரண்படாதே முரண்படாதே...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதில் முரண்படாதே..
உருவெடு உருவெடு...
ஜாக்டீயாய் உருவெடு...
அலட்சியம் வேண்டாம்...
அலட்சியம் வேண்டாம்..
போராட்டத்தை அறிவிப்பதில் அலட்சியம் வேண்டாம்..
சோகம் தான்..
சோகம்தான்..
உங்கள் வேகம் எங்கள் சோகம் தான்..
தாண்டினாயே...?
தாண்டினாயே...?
எங்கள் கையைப் பிடித்துத் தாண்டினாயே..?
முழு கிணரும் தாண்டினாயா...?
காத்திருக்காதே..
காத்திருக்காதே...
அரசின் அறிப்பை எதிர்பார்த்து காத்திருக்காதே...
வகுத்திடுக வகுத்திடுக..
அனல் பறக்கும் போராட்ட வியூகம் வகுத்திடுக..
கையில் எடு..
கையில் எடு...
கடைசி ஆயுதத்தை (தொடர் வேலைநிறுத்தம்) கையில் எடு...
புரிகிறதா புரிகிறதா...?
பாதிக்கப்பட்டவர்களின் கொந்தளிப்பு உனக்குப் புரிகிறதா..?
நெருக்கடி கொடுப்போம்...
நெருக்கடி கொடுப்போம்...
தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கும்வரை நெருக்கடி கொடுப்போம்...
காப்பாயோ..காப்பாயோ...
இனியும் அமைதி காப்பாயோ..
இனியும் தாமதம் செய்திட்டால்..
வெளுத்திடுமே...
வெளுத்திடுமே..
சாயம் இருப்பின் வெளுத்திடுமே..
-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.

2 comments:

  1. பாதிக்கப் பட்டவர்களே போராட்டம் அன்று பள்ளியை திறந்து வைத்திருந்தார்கள்.போராட்டத்திற்கு வந்தவர்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திலே இருந்ததது.மற்றவர்கள் எங்கே போனார்கள் என தெரியுமா? ஜாக்டோ பள்ளியை மூட சொல்லும் பாதிக்கப்பட்ட திறப்பான்.இந்த நிலையில் ஜாக்டோவை குறை சொல்ல இயலாது நண்பர்களே!

    ReplyDelete
  2. உண்மை உரைத்திடும் கட்டுரை....இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டும்...பழைய ஓய்வூதியம் வேண்டும் ....இவையிரண்டையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி