எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு என்றும் ஹால் டிக்கெட்டில் முதன் முதலாக எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.தேர்வுகள்பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 4–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைகிறது.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி முடிவடைய உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 70 ஆயிரம் மாணவ–மாணவிகளும், பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேர்களும் எழுத உள்ளனர். தேர்வுக்கு உரிய பணிகள் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.புதிய முறைஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியபின்னர் அவர்களின் விடைத்தாள்கள் எங்கு செல்கிறது என்று அவற்றை சிலர் பின் தொடர்ந்து சிபாரிசு செய்து மதிப்பெண் பெற முயற்சி செய்வது உண்டு.அப்படி யாரும் முயற்சி செய்யாத வகையில் புதிய முறையை அரசு தேர்வுகள் துறை கடந்த சில வருடங்களுக்குமுன்பாக அறிமுகப்படுத்தியது. அதன்படி தேர்வர்களின் விடைத்தாளின் முன்பக்கத்தில் கம்ப்யூட்டர் மூலம் ரகசிய கோடு கொடுக்கப்படுகிறது. தற்போது அந்த ரகசிய கோடு உடன் முன்பக்க தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஹால் டிக்கெட்முன்பக்கத்தாள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். பின்னர் அங்கு உள்ள ஆசிரியர்கள் மூலம் காலியாக உள்ள விடைத்தாள் பக்கங்களுடன் முன் பக்கத்தாள் நூல் கொண்டு தைக்கப்படும்.இப்போதே தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.முதன் முதலாக தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் என்று கூறி மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:–

செல்போனுக்கு தடை
* மாணவர்கள் தேர்வு எழுத வரும்போது ஹால் டிக்கெட்டை அறை கண்காணிப்பாளரிடம் காண்பித்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
* செல்போனோ அல்லது இதர தொலைதொடர்பு சாதனங்களோ தேர்வு வளாகத்திற்குள் அல்லது தேர்வு அறைக்குள் கட்டாயமாக கொண்டு வரக்கூடாது.
* விடைத்தாளில் எந்த காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாவையோ அல்லது வண்ணபென்சில்களையோ பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாளின் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவோ அல்லதுதனியாக பிரித்து எடுக்கவோ கூடாது.ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை
* துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்தல் மற்றும் தமது விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும்.எனவே மாணவர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

3 comments:

  1. நல்ல பயனுள்ள வரவேற்க தக்க அறிவுரை..,

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய ஒரு முக்கிய செய்தி...

    இதுவரை நடைபெற்று முடிந்த ஆசிரியர் தேர்வு குளறு படிகள் அரசு திருத்தி கொள்ள முன் வராததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது..

    உளவு துறையின் ரகசிய சர்வே படி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று உணர்ந்து கொண்டதால், இனி எந்த பணி நியமனமும் நடைபெறாது என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

    பிப்ரவரி யில் நடைபெறும் பட்ஜெட் கூட்ட தொடர்களிலும் எந்த அறிவிப்பும் வராது என நம்ம தகுந்த தவவல் கிடைத்துள்ளது.

    எனவே யாரும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்... தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருந்தாதீர்கள்...

    நாளை அந்த நம்ப தகுந்த தகவல்களை வெளியிடுகிறேன்...

    ReplyDelete
  3. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி