பெட்ரோல் -4, டீசல் -3: ரூபாய் அல்ல காசுகள் குறைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2016

பெட்ரோல் -4, டீசல் -3: ரூபாய் அல்ல காசுகள் குறைப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு 4 காசுகளும், டீசலுக்கு 3 காசுகளும் குறைத்துள்ளது.கடந்த இரு வாரங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 அமெரிக்க டாலர் வரை குறைந்துள்ளது. இதன்படி பெட்ரோலுக்கு ரூ. 1.04ம், டீசலுக்கு ரூ. 1.53ம் குறைத்திருக்க வேண்டும்.ஆனால், மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்றாவது முறையாக உயர்த்தியது. இந்த விலை உயர்வு மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ. 3200 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தெரிகிறது.இந்நிலையில் பெட்ரோல் விலையை 4 காசுகளும், டீசல் விலையை 3 காசுகளும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்தவிலைக்குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.கலால் வரி உயர்த்தப்படாமல் இருந்தால் பெட்ரோல் ரூ. 55.93க்கும், டீசல் ரூ. 37.71க்கும் விற்பனை செய்யப்படும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அரசு ரூபாய் அளவில் குறைக்காமல் காசு அளவிலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகிறது.தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கலால் வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி