ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2016

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

மதுரை அருகே ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5  லட்சம் மோசடி செய்ததாக, மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் அய்யலுராஜ்(48). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.


இவரது மனைவி ஆசிரியைப் பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில், அய்யலுராஜுக்கு, திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயப்பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அவர், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்கள் உள்ளதாகவும், அவர்கள் மூலம் அய்யலுராஜுவின் மனைவிக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.மேலும், சென்னையில் தபால் துறையில் பணிபுரியும் சேகர், கிலாடி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் அய்யலுராஜ் கடந்த 28.9.2015-இல் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். 4 மாதங்கள் ஆன நிலையில் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தர வில்லையாம்.

இது தொடர்பாக அய்யலுராஜ் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் தாலுகா போலீஸார், ஜெயப்பாண்டி, சேகர், கிலாடி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி