அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும் செல்போனில் கிடைக்கும்பல்வேறு அரசுத் துறைகளின் அனைத்து சேவைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செல்போனில் கிடைக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என மத்தியஅரசுஅறிவித்துள்ளது.டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிவித்தபோது, இ-கவர்னன்ஸ் எனும் மின்னணு நிர்வாகத்தின் அடுத்த கட்டமாக எம்-கவர்னன்ஸ் எனும் மொபைல் நிர்வாகம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டால்,அரசின் பலதரப்பட்ட சேவைகளை கிராமப்புறத்தில் இருப்பவர்களும் எளிதில் அறியமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என அரசு திட்டங்களுக்காக அரசு அலுவலகங்களில் மக்கள் இனி அல்லல்பட வேண்டியதில்லை என்றும் எல்லா விவரங்களையும் கையடக்க மொபைலில் அறிந்து கொண்டு பயனடையலாம் என்றும் அப்போது கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து மொபைல் போனில் அரசு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சாத்தியங்களை மத்திய அரசு ஆராய்ந்து வந்தது.இதுபற்றி நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைதீர்வுத் துறை தரப்பில் சாப்ட்வேர் நிறுவன கூட்டமைப்பான நாஸ்காம், கேபிஎம்ஜி ஆகியவற்றுடன் பல கட்ட ஆலோசனை நடைபெற்று அறிக்கை தயாரானது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும்மக்கள் குறைதீர்வுத்துறை செயலாளர் தேவேந்திர சவுத்ரி கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்த பரிந்துரை அறிக்கையில், ''மின்னணு நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வரும் 193 நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் தரவரிசை பட்டியலில், இந்தியா 113ம் இடத்தில் உள்ளது. அரசு செயல்படுத்த உள்ள, செல்போன் நிர்வாக திட்டம் அமலுக்கு வந்தால், டாப் 10 தரவரிசையில் இந்தியா இடம் பிடிக்கும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்குக் கொள்கைகள் வெற்றி பெறவும், அரசின் எல்லா சேவைகளையும் மக்கள் உள்ளங்கையில் வைத்து தெரிந்து கொள்ளவும் செல்போன் நிர்வாக சேவை திட்டத்தை முடுக்கிவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.
Feb 1, 2016
Home
kalviseithi
அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும்செல்போனில் கிடைக்கும்
அடுத்த 5 ஆண்டுகளில் அரசு சேவைகள் அனைத்தும்செல்போனில் கிடைக்கும்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி