900 அரசு முதுகலை ஆசிரியர்கள் பணியிடத்துக்குநீட்டிப்பு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2016

900 அரசு முதுகலை ஆசிரியர்கள் பணியிடத்துக்குநீட்டிப்பு ஆணை

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த, 2014ம் ஆண்டு, 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.


ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்காக, பாடத்துக்கு ஒன்று வீதம் ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என, மொத்தம், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்கு, ஓராண்டுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆணை, 2014 செப்., 22ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இவை, 2015 செப்., 22ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, இந்த ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை இருந்தது. மேலும் தொடர்ச்சியாக ஐந்தாண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு செய்து, அரசாணை வழங்க வேண்டும் என தமிழக அரசை, பள்ளிக்கல்வித்துறை கேட்டிருந்தது.

இதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் சம்பளம் பெற வேண்டும் என்பதற்காக, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், நிலுவை மற்றும் ஜனவரி மாத சம்பளத்தை இன்னும் சில நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி