தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்: பாதிப்பில்லை என்கிறது பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2016

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்: பாதிப்பில்லை என்கிறது பள்ளிக்கல்வித்துறை

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை சட்டசபை தேர்தலில் வெளிப்படுத்துவோம் என்று ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கட்கிழமையான இன்றும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலைஆசிரியர்களின் ஊதியக்குழுவில் உள்ள முரண்பாட்டை கலைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர், ஆசிரியர் எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 3 நாள்தொடர் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். 2011-ல் சட்டசபைத் தேர்தலில், ‘6வது ஊதியக்குழுவில் உள்ள வேறுபாடுகள் நீக்கப்படும்' என்றும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், மருத்துவப்படி, பயணப்படி, கல்விப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் ஜெயலலிதா உறுதியளித்தார். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடமும், இயக்குநரிடமும் மனு கொடுத்தும் பதில்இல்லை என்பது ஜாக்டோ அமைப்பினரின் குமுறலாகும்.

1 comment:

  1. மதிப்பிற்குரிய அம்மா , தொழில் நுட்ப பட்டதாரி 20000 தனியார் நிறுவனத்தில் 12 மணி நேரம் வேலை செய்து வாங்குகிறோம் . கரும்பு வட்ட போகும் கூலி தொழிலாளி 12 மணிநேரம் வேலை செய்து , நாள் ஒன்றுக்கு 500 வாங்குகிறான். என் கோரிக்கை அலுவலக துப்புரவாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை 15000 - 25000 குள் சம்பளம் நிர்ணயுங்கள் . எல்லோரும் மனிதர்களே, அனைவரின் உணர்வுகளும் , தேவைகளும் ஒன்றே. இது மட்டுமே அனைவரும் சமமான வளர்ச்சி உண்டு பண்ணும். இது போல் செய்யாத வரை நீங்கள் உடல் உழைப்பு மனிதர்களை புறக்கணிப்பதாக பொருள் கொள்வோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி