ஆசிரியர்களின் இந்த மாநிலம் தழுவிய போராட்டத்தால் இன்றும் தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டடுள்ள ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை தேர்தலில் வெளிப்படுத்துவோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வெறிச்சோடின.
தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்பள்ளிகள் முடங்கியுள்ளன.இதனால் மாணவர்களும் பள்ளிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து பெரும்பாலான பள்ளிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. ஒரு சில பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர்.
மதிப்பிற்குரிய அம்மா , தொழில் நுட்ப பட்டதாரி 20000 தனியார் நிறுவனத்தில் 12 மணி நேரம் வேலை செய்து வாங்குகிறோம் . கரும்பு வட்ட போகும் கூலி தொழிலாளி 12 மணிநேரம் வேலை செய்து , நாள் ஒன்றுக்கு 500 வாங்குகிறான். என் கோரிக்கை அலுவலக துப்புரவாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை 15000 - 25000 குள் சம்பளம் நிர்ணயுங்கள் . எல்லோரும் மனிதர்களே, அனைவரின் உணர்வுகளும் , தேவைகளும் ஒன்றே. இது மட்டுமே அனைவரும் சமமான வளர்ச்சி உண்டு பண்ணும். இது போல் செய்யாத வரை நீங்கள் உடல் உழைப்பு மனிதர்களை புறக்கணிப்பதாக பொருள் கொள்வோம்.
ReplyDelete