கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2016

கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்

மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.

இத்திட்டம் செயல்படும் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கைத்தொழில் (கிராப்ட் ரூம்) அறைகள் கட்ட மாநில அளவில் மத்திய அரசு ரூ.220 கோடி நிதி ஒதுக்கியது.


தலா ரூ.6.50 லட்சத்தில் குறைந்தபட்சம் 20க்கு 20 என்ற அளவில் ஒரு வகுப்பறை கட்டும் பணி நடக்கிறது.சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) தலைவர்தான் பணிகளை கண்காணித்து கட்டுமானத்திற்கான நிதியை செலவிட வேண்டும்.ஆனால், அப்பகுதி அரசியல் கட்சியினர் சிலர் 'பணிகள் நடக்கும் நிதியில் இருந்து தங்களுக்கு 'கட்டிங்' வேண்டும்,' என தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

'கட்டிங்' கொடுக்க முடியாமலும், அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்ய முடியாமலும் தலைமையாசிரியர்கள் தவிக்கின்றனர்.விதிமீறல் : சில பகுதிகளில் விதிமீறி உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணிகளை தலைமையாசிரியர்கள் வழங்கியுள்ளனர். இதன்மூலம் கட்சியினரை ஒப்பந்தக்காரர்கள் 'சமாளித்து' பணிகளை தொடர்கின்றனர்.

பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் கூறுகையில்,"வகுப்பறைகள் எவ்வாறு கட்ட வேண்டும் என்ற வரைபடம் அளிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளை 'சமாளிக்க' முடியவில்லை. அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் அது அந்த அரசியல்வாதிக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது," என்றனர். இத்திட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணித்து முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி