எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் ‘கல்வி நிதி’; பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2016

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் ‘கல்வி நிதி’; பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார்

‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது.


பரிசுகளை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வழங்குகிறார்.மாணவர் பரிசு திட்டம்கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழி காட்டி வரும் ‘தினத்தந்தி’ மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வந்தது.2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி’ கல்வி நிதி திட்டத்தைஅறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து மாவட்டத்திற்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தியின் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 30 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

சென்னை மாவட்டம்
1.ப.காயத்ரி, ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்.
2.டி.பிரியதர்ஷினி, சில்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளி,மயிலாப்பூர்.
3.ஜி.சுவேதா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.
4.பி.ஜனனி, ஜான் காபிரியேல் உயர்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.
5.பி.சரஸ்வதி, நாதன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெற்குன்றம்.
6.எஸ்.ராகுல், திரு.வி.க.மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.
7.இ.பூவரசன், ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.
8.இ.ஜெயதர்ஷினி, புனித வின்சென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அமைந்தகரை.
9.பி.ராஜதுரை, அன்னை வேளாங்கண்ணி உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.
10.ஆர்.சந்தியா, ஞானோதய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வியாசர்பாடி.

திருவள்ளூர் மாவட்டம்
1.ப.மோகனப்பிரியா, அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, கடம்பத்தூர்.
2.ஏ.சந்திரலேகா, சுதந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
3.ஆர்.கார்த்திகா, டி.ஆர்.பி.சி.சி.சி.மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
4.பி.தாமோதரன், அரசினர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர்.
5.எஸ்.உஸ்னா, இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி.
6.வி.எம்.விவேதா, அரசு உயர்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை.
7.ஜி.சாரத பிரித்தா, டி.ஆர்.பி.சி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
8.எஸ்.கஜீதா பர்வீன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
9.ஜி.பவித்ரா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, போரூர்.
10.எம்.ராகுல், வி.எம்.எச். மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.ஜி.புரம்.

காஞ்சீபுரம் மாவட்டம்
1.ச.ஜெகதீசன், பாரதிதாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம் மாவட்டம்.
2.ஜி.கே.இளமதி, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மறைமலைநகர்.
3.எஸ்.யஷ்வந்த் குமார், செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
4.கே.தமீம் நிஷா, புனித மாற்கு உயர்நிலைப்பள்ளி, மேற்கு வேளச்சேரி.
5.எஸ்.ஆனந்த், அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குப்பட்டு.
6.டி.சாந்தகுமார், அரசு உயர்நிலைப்பள்ளி, கருநீலம்.
7.எம்.தெய்வானை, அரசு மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.
8.ஆர்.தேவதர்ஷினி, எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
9.வி.ரஞ்சனி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
10.கே.ஜின்சிவர்கிஸ், கிறிஸ்து கிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்.

பள்ளிக்கல்வி இயக்குனர்‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் நடைபெறுகிறது.விழாவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.‘தினத்தந்தி’ மேலாளர் து.ராக்கப்பன் வரவேற்று பேசுகிறார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி