எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கானமுன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது. ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இத்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை, தங்களுக்கும் வழங்கக் கோரி, ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அருள் உட்பட, நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.அந்த மனுக்களில், 'தமிழில் படித்தவர்களுக்கு, 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; அந்த முன்னுரிமையை எங்களுக்கும் வழங்க வேண்டும்' என, கோரியிருந்தனர்.மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு, 'மனுதாரர்கள், புதிதாக அரசு பணியில் சேர விண்ணப்பிக்கவில்லை; ஏற்கனவே பணியில் உள்ளவர்கள். அந்த அடிப்படையில், அவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு இருப்பதாக, இந்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்டது.
Feb 1, 2016
Home
kalviseithi
'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்
'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி