ஜாக்டோ போராட்டம்: ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்குப் பட்டியல் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2016

ஜாக்டோ போராட்டம்: ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்குப் பட்டியல் தயார்

கடலூர்:மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) 3 நாள் போராட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடத்தியது.


கடலூர் மாவட்டத்தில் 1,424 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 5,045 ஆசிரியர்களில் 1,270 பேரும், 282 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 5,098 ஆசிரியர்களில் 1,048 பேரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 300 பேர்  மட்டுமே கைதாகினர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியலை மாவட்டக் கல்வித்துறை தயாரித்துள்ளது.

போராட்ட நாள்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளித்து பணிக்கு வரவில்லையெனில், விடுப்பு குறிப்பிடப்பட்டதற்கான காரணம் சரியாக உள்ளதா என ஆராய்ந்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 1,500 ஆசிரியர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாம். இவர்களுக்கு ஒரு நாள் முதல் 3 நாள்கள் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடமிருந்து இதற்கான உத்தரவு வரப்பெற்ற பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

6 comments:

  1. மதிப்பிற்குரிய Unknown நண்பர் அவர்களுக்கு தாங்கள் 3.02.16 அன்று எந்த பணி நியமனமும் நடைபெறாது மற்றும் அதற்கான உறுதியான தகவல் பதிவிடுகிறேன் என கூறினீர்கள், ஆனால் எந்த தகவலும் நீங்கள்
    பதிவிடவில்லை?

    தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் உறுதியாக பதிவிட்டதால் தான் கேட்டேன்..,

    ReplyDelete
  2. Ama arul sir oru sila per padikiravanga and nambikaiya irukavanga manasa kasta padutave idhumari sila per varanga. Unmaiyana newsna ineram anda evidencea comment panirukanumla. Eadhu nadanthalum namathan eathuja porom avanga ilaye. God is great

    ReplyDelete
  3. Ama arul sir oru sila per padikiravanga and nambikaiya irukavanga manasa kasta padutave idhumari sila per varanga. Unmaiyana newsna ineram anda evidencea comment panirukanumla. Eadhu nadanthalum namathan eathuja porom avanga ilaye. God is great

    ReplyDelete
  4. பிரபா அவர்களே ஒரு சிலர் சொல்லுவதை தான் நம்ப வேண்டி உள்ளது உண்மையா என்று கேட்டல் பதில் இல்லை,

    நடப்பன நடக்கட்டும்
    கடவுள் துணையை நம்புவோம்,

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய மணிகண்டன் அவர்களே நீங்கள் கேட்ட 10 ஆம் வகுப்பு தக்கல் முறை தேதி வெளியிடப்பட்டுள்ளது ஜெயாபிளஸ் செய்தி சேனல் பார்க்கவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி