எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் ராமலிங்கம் வெளியிட்ட செய்தி:


மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் திங்கள்கிழமை (பிப்.8) முதல் www.tndge.in என்ற இணைய தளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்ப எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள்தங்கள் தேர்வுக் கூட அனுமதி சீட்டை எடுத்துக் கொண்டு தாங்கள் அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரை பிப்.19-ஆம் தேதி அணுகி,தேர்வு நடைபெறும் நாள் பற்றிய விவரம் பெற வேண்டும்.ஏற்கனவே செய்முறை பயிற்சி பெற்றவர்கள் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மார்ச் 2016 இடைநிலை விடுப்புச் சான்றிதழ் பொது தேர்வுக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வு குறித்து தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி